Tuesday, November 24, 2009
கபட நாடக வேடதாரி, தமிழின கருங்காலி கருணாநிதி
தமிழத்தின் சகுனி, சனி இரண்டிற்கும் நாம் ஒரு உருவத்தை கற்பனை செய்து
பார்க்க வேண்டுமென்று விரும்பினால் அதிகசிரத்தை எடுக்கவேண்டிய
அவசியமில்லை. கருணாநிதியின் உருவத்தை நினைவு கூர்ந்தாலே போதும்,
அப்படிப்பட்ட குள்ளுகபட்டன் அவன். தமிழனத்தின் சாபக்கேடு அவனை ஒரு
கூட்டம் தமிழனத்தின் தலைவன் என்று தூக்கி சுமக்கிறது.அவன் இரண்டு
குடும்பங்களுக்கு தலைவன் என்பதை தாண்டி வேறு ஒன்றும் செய்வது இல்லை
என்பதுதான் உண்மை. அப்படி அவன் ஏதாவது செய்து இருப்பதாக யாராவது சொன்னால்
நான் கேட்கும் முதல் கேள்வி ஆசியாவிலேயே முதல் இருபது பணக்காரர்கள்
வரிசையில் தன் குடும்பத்தை உயர்த்திய கருணாநிதி தமிழனத்தை இன்றும்
இலவசங்களுக்கு கையேந்துபவர்களாக வைத்து இருப்பது ஏன்? இவன் கிடக்கிறான்
ஏதோ ஏமாளி தமிழக தமிழர்களை பிழைப்புவாதத்திற்காக ஏதோ வாய்க்கு வந்தபடி
பேசிவிட்டு ஆட்சி செய்கிறான் என்று ஒதுக்கி தள்ளுவது இனியும் கூடாது
என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவனது சமீபத்திய ஈழக்கரிசனை அறிக்கையானது
ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்ததுபோல்
இருக்கிறது. அவனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் நான் ஒரு சில கேள்விகளை
கேட்டு ஆகவேண்டும்.
சிங்கள இனவெறி அரசு ஏ-9 பாதையை மூடி ஈழத்தமிழர்களுக்கு உணவு மருந்து
தடையை ஏற்படுத்தியபோது தமிழ் ஈழவிடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புகுழு
சார்பாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அய்யா பழநெடுமாறன்
தலைமையில் பலகோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் திரட்டப்பட்டன. சர்வதேச
செஞ்சிலுவை சங்கம் கொடுத்த ஒப்புதலைக்கொண்டே இவ்வளவும் திரட்டப்பட்டது.
ஆனால் என்ன நடந்தது கருணாநிதி அங்கம் வகித்த மத்திய அரசு சர்வதேச
செஞ்சிலுவை சங்கத்தின் அனுமதியையும் மீறி அனுப்பவிடாமல் தடுத்து
நிறுத்தியது.தனது மருமகனை தனி விமானத்தில் ஏற்றி அமெரிக்காவரை சென்று
மருத்துவம் பார்த்தாயே.என் மக்களுக்கு மருந்து கிடைக்காது
தடைசெய்துவிட்டு சிங்களவன் போரை தொடங்கினானே அப்போது தமிழின தலைவரே எங்கே
சென்றிருந்தாய்? அப்போதும் வெகுண்டெழுந்து தமிழ் தேசிய அமைப்பினர்
போராட்டம் நடத்தினார்கள். அந்த நேரத்தில் இந்த கருணாநிதி என்ன செய்தார்
தெரியுமா தோழர்களே! படகில் உணவு மற்றும் மருந்து பொருட்களை நாங்களே ஏற்றி
எடுத்து செல்வோம் என்று அய்யா பழநெடுமாறன் தலைமையில் தமிழ்தேச
பொதுவுடமைக்கட்சி, தமிழர்கழகம்,தமிழ்தேசிய விடுதலை இயக்கம் போன்ற
அமைப்புகளால் நடத்தப்பட்டது, அன்று ஒரு படகு ஓட்டுபவரை கூட கடலுக்குள்
அனுமதிக்கவில்லை இந்த கருணாநி. கடற்கரை வரை வந்த காவல்துறையினர்
போராட்டகுழு கடற்கரையை அடைந்ததும் காணமல் போனார்கள். இது ஒரு
அடையாளப்பூர்வமான போராட்டம். ஒன்று படகு ஓட்டுபவர்களை அனுமதித்து இருக்க
வேண்டும் அல்லது போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து இருக்குவேண்டும்.
இரண்டும் இல்லாமல் அவமானப்படுத்தியவன் தான் இந்த இனதுரோகி கருணாநிதி.
இதை தொடர்ந்து அய்யா பழநெடுமாறன் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
இருந்தார்.அவர் உண்ணாவிரதம் இருந்த தனியார் இடத்தில் பந்தல் போடவிடாமல்
காலித்தனம் செய்தது கருணாநிதி வளர்ப்பு நாய்களான காவல்துறை. இதுதான்
கருணாநிதியின் உண்மையான முகம்.
இதே காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய
பிரதமரை சந்தித்து மக்களின் அவலத்தை எடுத்துசொல்லி உதவிகேட்டு தவமாய்
தவமிருந்தும் தமிழின தலைவரே நீ உதவவில்லையே. மூன்று மாதம்
காத்துகிடந்தார்களே! அவர்கள் என்ன உனக்கு பிடிக்காத புலிகளா? ,மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தானே! அப்போது நீ என்ன செய்து கிளித்தாய்?
செஞ்சோலை சிறுவர்கள் இல்லத்தின்மீது குண்டுபோட்டு 67பிஞ்சுகளை கொன்றானே
சிங்களவன் அப்போதாவது நீ இந்திய அரசை வற்புறுத்தி ஆயுதம் கொடுக்காதே
என்று சொன்னது உண்டா?
உனக்கு தெரியாமல் சிங்களவன் கோயமுத்தூரில் வந்து இராணுவ பயிற்ச்சி
எடுத்தானே? அதுவும் தெரியாதென்றால் நீ பேசிய உன் சுயமரியாதை எந்த
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது? சகோதரயுத்தம் கூடாது என்று தாம்
கூறிவருவதாக பேசிய கருணாநிதி உன் கட்சிக்குள்ளேயே எத்தனையோ தலைவர்களை உன்
கட்சிக்காரன் கொன்று இருக்கிறான், உன் உள்கட்சிக்குள் நடக்கும் சகோதர
சண்டைக்கு என்ன பதில்? அது கிடக்கட்டும் உன்னோட மதுரை மடாதிபதி உன் மகன்
தினகரன் அலுவலகத்தை தீவைத்து கொளுத்தினானே அதுக்கு என்ன பெயர்? துரோகிகளை
ஒழித்துக்கட்டுவது சகோதர யுத்தம்மல்ல. உனக்கு தெரிந்த நாளில் இருந்து நீ
உனது மாநாடுகளில் இயற்றுகின்ற தீர்மானம் ஒன்று கட்சத்தீவை மீட்போம்,
அடுத்தது சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம். நீ 20வருடங்களாக
நாற்காலி தேய்த்தும் இது இரண்டிலும் ஒரு அங்குலமாவது முன்னேறி
இருக்கிறாயா?
ஆதாரபூர்வமாக 400தமிழக மீனவர்களை கொன்ற சிங்களவனுக்கு தமிழக முதல்வராக
இருந்து நீ சொன்ன பதில் என்ன? வெள்ளைக்காரன் நாடுகளில் கூட குடியுறிமை
பெற்று சகவாழ்வு வாழ்கிறார்கள் தமிழர்கள்.ஆனால் தாய்தமிழகம் என்று இங்கு
வந்த ஈழத்தமிழர்களை அகதிகளாக்கி காலை மாலை இரண்டுமுறை கையொப்பம்
போடவைத்து அவர்களையும் கைதிகளாக்கி வைத்து இருக்கிறாய். உனக்கு அந்த
விடுதலையை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இந்திய சிங்கள அரசுகள்
கூட்டு ரோந்துக்கு ஒத்துக்கொண்டு மறுநாள் மறுத்து அறிக்கைவிட்டவன் நீ.
தமிழர்களை அகதிகளாக கூட ஈழமணிலிருந்து இங்கு வரவிடாமல் தடுத்த படுபாவி நீ
என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஈழமக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அய்ரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள்
கூட அனுமதி கொடுத்தது. ஆனால் நீ எந்த ஒரு ஆதரவு போராட்டமும் நடந்த
அனுமதிக்கவில்லை.ஈழத்தமிழனமே அதன் ஈழம்தான் எங்களின் விடிவுக்கு ஒரே
தீர்வு என்று ஒன்றாய் நின்றதே! நீ இந்திய மத்திய அரசின் கொள்கைத்தான் என்
கொள்கையும் என்று காங்கிரஸ்காரி சோனியாவின் சேலை முந்தானையை
பிடித்துக்கொண்டு திரிந்தாயே! அர்பணிப்பு நிறைந்த ஈழவிடுதலைப்புலிகளை
பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒருமணி நேரம் உண்ணாவிரதம்
நடத்தி உலகசாதனை புரிந்தவன் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.
அந்த நிகழ்வே நீ பெரிய கூத்தாடி, கோமாளி, வேடிக்கைகாரன் என்பதை தமிழ்
உலகம் புரிந்துகொண்டது.
நான்காம் கட்ட விடுதலைப்போரின் இறுதிநாட்களில் பல ஆயிரம் மக்கள்
இறந்தார்களே, உயிரோடு இருந்தவர்களையும் புல்டோசர் இயந்திரம் கொண்டு
எல்லாரையும் புதைக்குழியில் போட்டு மூடினான் இனவெறியன் சிங்களவன். அதை
கண்டுமா நீ இன்னும் உள்ளுக்குள் அழுதுகொண்டு இருக்கிறாய்! போதும் உன்
நாடகம். அந்த இறுதி நாட்களில் தமிழினமே சோகத்தில் கிடந்தபோது நீ உன்
மகன்,மகள்,பேரனுக்கும் மந்திரிபதவி வாங்கிகொடுத்து எல்லாருக்கும் இனிப்பு
கொடுத்து விழாவாய் கொண்டாடினாய். இது செத்தவீட்டில் திருமணம் செய்வதற்கு
சமம். இந்த ஒரு நிகழ்வு போதும் நீ எப்படிப்பட்ட கயவன் என்பதற்கு.
தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள வதை முகாம்களுக்கு எந்த ஒரு
செய்தியாளார்களையும் அனுமதிக்காக்த ராசபக்சே கருணாநிதி மீது மட்டும்
நம்பிக்கை வைத்து அவனது போலி நாடாளுமன்ற குழுவை அனுமதித்தான் என்றால்
பாருங்கள் கருணாநிதியின் கபட நாடகம் நன்றாக விளங்கும்.
தமிழர்களே தமிழனத்திற்கு எதோ தீங்கு ஒன்று கருணாநிதியால் வரப்போகிறது.
அதன் வெளிப்பாடுதான் ரணிலுக்கு வாக்களித்து இருந்தால் அழிவு இருந்து
இருக்காது என்றும் கூறுகிறான். அதுமட்டுமல்ல ஏற்கனவே பிரபாகரன் இரந்தால்
நான் வருத்தப்படுவேன் என்று NTDV பேட்டியில் சொன்னான். அதன் பிறகுதான்
ஈழத்தில் பேரழிவு நடந்தது. இப்போது உள்ளுக்குள் அழுவதாக சொல்கிறான்.
இதற்குள்ளும் ஏதோ ஒரு சூழ்ச்சி திட்டம் இருக்கும். கருணாநிதியின் இன்னும்
ஒரு முக்கிய சாதனையை நான் சொல்லி ஆகவேண்டும்.
மாவீரன் முத்துக்குமார் அவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்
வாசித்துவிட்டு அதையே திரும்பப்பெற்று சாதனை புரிந்த சகுனி தமிழத்தை
பிடித்த சனியன். கருணாநிதி இது போன்ற போலித்தலைவர்களையும்,துரோகிகளையும்
நாம் இனம் கண்டு புறக்கனிப்போம். அறம் காத்த அந்நாள் போகட்டும்.இனம்
இனம்தான் வேண்டும். எதிரி எவ்வகையில் வந்தாலும் எதிர்த்து
ஒழித்துக்கட்டுவோம்.
தமிழர்களே!
தமிழ்தேசியம் நம் பிறப்புரிமை!
அதை வெல்ல சூளுரைப்போம்...
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை மலரும்.
தோழர்சிவா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment