கொட்டடி கிடத்தி குண்டடி நிகழ்த்தி
கம்பிவேலிக்குள் கயமை உடன்பாடு
கண்டொழிக்க நினைத்தானே கயவன்
மாண்டொழியா எம் மானம்...
மறத்தமிழர் தன்மானம்...
மண்மிசைஅயலாட்சி அடியோடொழிக்கவே
போலித்தலைமை புறங்கடை விரட்டவே
ஆளப் பெரும்படையணி திரண்டதுவே!
புலத்தினில் புரட்சியேந்தி புதுப்படை திரண்டதுவே!
எம் தலைமையிங்கே வுதிக்கும்!
வன்னித் தலைமை வானுயரும்!
கடற்புலியும் கரும்புலியும்- ஆற்றல்
களப்புலியும் பூவையரும் புரட்சியேந்த
பிறந்த புலிப்படை மீளும்!
களத்தில் மடியும் இனமறவர்
கல்லறை சென்றும் எழுகின்றார்!
உணர்வை யூட்டும் உயர்(நடு)கல்லாய்...
உலகை உலுக்கும் உணர்வுகளாய்...
இன்னே நெருப்பில் எழுகிற ஈழம்
எம் நினைவில் வளருது நாளும்!
தாகந் தணிக்கும் எந்தலைவா
ஈகந் தருவோம் இன்னுயிரை!
எத்தனை தாய்களின் மைந்தன் நீ
உற்ற உறவு மடிவெய்த- வாழ்வு
செழித்த கழனியெலாம் எதிரி (கைக்)கொள
ஏதிலிகளான இலக்கம் தாய்க்கும்
இலக்கிய தனையன் நீ!
ஈழத்து நிலவே! நீயெம் உள்ளத்தரசாய்...
இவ்வுளத்து அரசை நிலத்தி(னி)ல் எழுப்புக!
மனத் துயருடைத்து ஆலையும் நற்றமிழ்ச்சாலையும்
அலைபடர் கடலினும் பெருக்குக!
எண்ணிலா பெருமைகள் இன்னும் படைத்து
விண்ணுயர் நெடும்புகழீட்டி நெடிது வாழ்கவே!
தோழர் சிவா
Wednesday, December 30, 2009
Wednesday, December 23, 2009
மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளும் நம் கடமையும்! -த.தே.பொ.க அறிக்கை
மாவீரன் முத்துக்குமார் கடந்த ஆண்டு, 2009 சனவரி 29ஆம் நாள் தமிழீழ மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தித் தீக்குளித்து மாவீரரானார். அவர் நினைவைப் போற்றும் வகையிலும் அவர் அளித்த இறுதி அறிக்கையின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியெடுக்கும் வகையிலும் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை 2010 சனவரி 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் வீரவணக்கச் சூளுரை நாளாகக் கடைபிடிக்கிறது. இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:
“தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள மார்வாடி குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வடவர்கள் உள்ளிட்ட வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ் ஈழம் அமைய துணை நிற்போம்! தமிழ்த் தேசக் குடியரசு அமைய தமிழ்த் தேசியப் புரட்சியை முன்னெடுப்போம்! – ஆகிய சூளுரைகள் ஏற்கும் வகையில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்ட வாசகங்களை முழக்கங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
’’தமிழினத்தின் இருள் நீக்கத்
தன்னையே சுடராக்கி தீக்குளித்த முத்துக்குமார்
உன்னை வணங்குகிறோம்
திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவான
செல்வனே வீரவணக்கம்!
இந்தி ஆதிக்கத்தின் இருளகற்ற
செந்தீ மூட்டி உயிரீந்த
சின்னச் சாமியின் எச்சமே வீரவணக்கம்!
உன்னைப் பின்பற்றி
உடலை நெருப்பிற்குத் தந்த
பதினைந்து தமிழர்க்கும் வீரவணக்கம்
மாற்று அரசியலைக் கட்டுங்கள்
ஓட்டு அரசியலை ஓட்டுங்கள் என்று
மாணவர்க்கும் இளைஞர்க்கும்
வழிகாட்டிய விடிவெள்ளி விடிவெள்ளியே
வீரவணக்கம்!
சேட்டென்றும் சேட்டானென்றும்
வந்தவனெல்லாம் தமிழகத்தைச் சுரண்ட
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது என்றாய்
உன் நினவு நாளில்
வெளியாரை வெளியேற்ற சூளுரைக்கிறோம்!
ஈழம் வெல்லவும்
இங்கு தமிழ்த் தேசம் மலரவும்
எங்களை ஒப்படைக்கிறோம்!
இந்தியாவும் சிங்களமும் தமிழினத்தின்
இரட்டைப் பகையென அறிந்து கொண்டோம்
உங்களை எரித்த நெருப்பு
எங்கள் பகையை எரிக்கட்டும்
எங்கள் மன அழுக்குகளை எரிக்கட்டும்
சாதி வெறி, மத வெறி மாசுகளை எரிக்கட்டும்
நெருப்புப் போராளிகளே
உங்களுக்கு எங்கள் நினைவு மலர்கள்!
வெல்க தமிழ்த் தேசியம்!’’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி -http://namthesam.com
“தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள மார்வாடி குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வடவர்கள் உள்ளிட்ட வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ் ஈழம் அமைய துணை நிற்போம்! தமிழ்த் தேசக் குடியரசு அமைய தமிழ்த் தேசியப் புரட்சியை முன்னெடுப்போம்! – ஆகிய சூளுரைகள் ஏற்கும் வகையில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்ட வாசகங்களை முழக்கங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
’’தமிழினத்தின் இருள் நீக்கத்
தன்னையே சுடராக்கி தீக்குளித்த முத்துக்குமார்
உன்னை வணங்குகிறோம்
திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவான
செல்வனே வீரவணக்கம்!
இந்தி ஆதிக்கத்தின் இருளகற்ற
செந்தீ மூட்டி உயிரீந்த
சின்னச் சாமியின் எச்சமே வீரவணக்கம்!
உன்னைப் பின்பற்றி
உடலை நெருப்பிற்குத் தந்த
பதினைந்து தமிழர்க்கும் வீரவணக்கம்
மாற்று அரசியலைக் கட்டுங்கள்
ஓட்டு அரசியலை ஓட்டுங்கள் என்று
மாணவர்க்கும் இளைஞர்க்கும்
வழிகாட்டிய விடிவெள்ளி விடிவெள்ளியே
வீரவணக்கம்!
சேட்டென்றும் சேட்டானென்றும்
வந்தவனெல்லாம் தமிழகத்தைச் சுரண்ட
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது என்றாய்
உன் நினவு நாளில்
வெளியாரை வெளியேற்ற சூளுரைக்கிறோம்!
ஈழம் வெல்லவும்
இங்கு தமிழ்த் தேசம் மலரவும்
எங்களை ஒப்படைக்கிறோம்!
இந்தியாவும் சிங்களமும் தமிழினத்தின்
இரட்டைப் பகையென அறிந்து கொண்டோம்
உங்களை எரித்த நெருப்பு
எங்கள் பகையை எரிக்கட்டும்
எங்கள் மன அழுக்குகளை எரிக்கட்டும்
சாதி வெறி, மத வெறி மாசுகளை எரிக்கட்டும்
நெருப்புப் போராளிகளே
உங்களுக்கு எங்கள் நினைவு மலர்கள்!
வெல்க தமிழ்த் தேசியம்!’’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி -http://namthesam.com
Sunday, December 13, 2009
வேட்டைகாரனுக்கு டென்மார்கிலும் மாணவர்கள் எதிர்ப்பு
வெளிவரவிருக்கும் 'வேட்டைகாரன்' படத்திற்கு டென்மார்க் மாணவர்களும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்ஐத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம்.
எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே.!
இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, ரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம். எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம்.
அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நீங்கள் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் ஒவ்வொரு டெனிஸ் குரோனரும் எமது உறவுகள் வருந்திச் சாகுவதற்காக நச்சுக்குண்டுகளை வழங்கிய, பெயரில் மட்டும் காந்தியம் பேசும் இந்திய தேசத்துக்குச் சென்றடையும் என்பதை மறந்துவிடாதீர்கள். இத்தகைய திரைப்படங்களை நாம் பாக்காமல் விட்டால் தமிழ்த்தேசியம் வாழும், நாம் பார்த்தால் தமிழ்த் தேசியம் சாகும் என்று முடிவெடுங்கள்.
சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும் தோழா, அப்படியென்றால் ஏன் எமது மக்கள் படும் துயரங்களை சினிமாவில் வெளிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது? தமிழன் ஒருவனை வைத்து இசையமைத்தால் தமிழனும் சிங்களவனும் பாசமலர்களென்று கதைகூறலாம். இது தான் இன்றைய அரசியல்.
உறவுகளே உங்கள் மனங்களை தெளிவுபடுத்தி மதியினால் முடிவெடுங்கள் . நான் திரையரங்கம் செல்லவில்லையென்றுவிட்டு இரவில் ஒளிந்து செல்லாதீர்கள். அறிவுடைய சமுதாயமாகிய வளர்ந்துவரும் நாம் ஒன்றை மட்டும் நன்கு ஆழமாகச் சிந்திப்போம். எமக்கான விடுதலை கிடைத்துவிட்டதா? அதை அழிக்க நினைக்கும் சக்திகள் யார்? அதற்கு நான் துணைபோகப் போகின்றேனா?
உங்கள் இளையதளபதி;: காங்கிரஸ் ஆதரவாளன்
விஐய் அன்டனி, எம் உறவுகளைக் கொன்றவர்களுக்கு பாட்டியற்றியவன்
சன் நிறுவனம்: எம்முறவுகளின் பிணத்தின்மேல் சிம்மாசனமிட்டு அரசியல் நடத்தும் கருணாநிதியின் குடும்பச்சொத்து.
வேட்டைக்காரன் தேவையா? இளைய தலைமுறையே, உனது உணர்வு செத்துவிட்டதா? மானமுள்ள தமழிச்சி ஒருத்தியின் பிள்ளையில்லையா நீ? தட்டிக்கேள் இவ் அநியாயத்தை. இதைப் போன்ற படங்களை தவிர்ப்பதன் மூலம், தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளும் திரைத்துறையினரைத் தட்டிக் கேட்போம்.
தளைத்தெழும் தமிழ்த் தேசியத்தின் கூரிய கிளைகள் நாங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)